பிக் பாஸிற்கு பின் அக்ஷயா கூறும் அந்த விடயம்; முன்னரும் இதே தான் சொன்னாரா? வைரலாகும் பதிவு
லவ் டுடே திரைப்படத்தில் நடிகையின் தங்கையாக அறிமுகமாகிய அக்ஷயா உதயகுமார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை அக்ஷயா உதயகுமார்
கேரளா மாநிலத்தை பிறந்து, நடன கலைஞராக இருந்து பின்னர் மாடலிங், நடிப்பு என பலதரப்பட்ட துறைகளில் தன்னை நிலைநிறுத்தி இருந்தார்.
தனது சகோதருடன் சேர்ந்து பல ரீல்ஸ்கள் செய்து பிரபலமாகி பல திரைப்படங்களும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹயா, சித்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
லவ் டுடே திரைப்படமானது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு 50 நாட்களுக்கு மேல் நீடித்தார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு இவர் தன்னை முன்னரே தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என பலராலும் பேசப்பட்டது.
வீட்டில் நடந்த பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுக்கவே இல்லை. மேலும் டாஸ்கிலும் அவரின் பங்கு சரியாக இல்லை. இதனால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.
இந்நிலையில் வீட்டிற்குள் இருக்கும் போது தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அக்ஷயாவின் இன்ஸ்டா பதிவு
அதில், "என்னுடைய நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் என்னுடன் இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அங்கு எனக்கு தேவையான அனைத்து பாடத்தையும் கற்றுக்கொண்டேன். சூழ்நிலைகளைச் சமாளிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். என்னுடைய நல்ல குணத்தை வைத்து அனைவரிடமும் பழகினேன். எனக்கு ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
அவர் ஏற்கனவே அடுத்தவர்களைத் தாக்கி கேம் விளையாடத் தெரியாது என கூறியிருந்தார். அதுபோலவே இந்த பதிவிலும் கூறியுள்ளார்.
மேலும் இவருக்கு எராளமான பட வாய்ப்புகள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |