100 ஆண்டுக்கு பிறகு உருவாகும் திரிகிரக யோகம்: 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது
சூரியன், சுக்கிரன், ராகு மூன்று கிரகங்கள் சேர்க்கையினால் திரிகிரக யோகம் உருவாகும் நிலையில், மூன்று ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
திரிகிரக யோகம்
மகா சிவராத்தியினை முன்னிட்டு, சூரியன், சுக்கிரன், ராகு என மூன்று கிரகங்கள் சேர்க்கையின் காரணமாக சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகயுள்ளது.
பொதுவாக ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சில குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றுவது வழக்கமாகும். ஆனால் சில தருணங்களில் ஒன்றுக்கு ஒன்று இணைந்து சக்தி வாய்ந்த யோகத்தினையும் அளிக்கின்றது.
இவ்வாறு கிரகங்களின் சேர்க்கையின் போது, மனிதர்களின் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும்.

அந்த வகையில் பிப்ரவரி 6ம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். இன்னும் இரண்டு தினங்களில் அதாவது 13ம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே கும்ப ராசியில் ராகுவும் பயணித்து வருவதால், திரிகிரக யோகம் உருவாகின்றது.
இந்த யோகத்தினால் மூன்று ராசியினர் பெரும் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த யோகத்தினால் அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வருகின்றது. மேலும் எடுக்கும் அனைத்து முடிவுகளும் நல்லதொரு பலனை அளிப்பதுடன், தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்கும் அதிகரிக்கின்றது.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த யோகத்தினால் தைரியம், வீரம் அதிகரிப்பதுடன், புதிய வீடு மற்றும் மனை வாங்கும் நிலை உருவாகும்.
தொழிலிலும் நல்ல லாபத்தினை பெறுவதுடன், உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கின்றது. பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கின்றது.

மகரம்
மகர ராசியினருக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைப்பதுடன், பண பிரச்சனைகள் அனைத்தும் தீருகின்றது. மேலும் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் வெற்றியும், வாழ்க்கை சிறப்பாகவும் அமையும். தொழிலில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினையும் பெறுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |