ஆனந்த் அம்பானியை விட வருங்கால மனைவி மூத்தவரா? ராதிகாவிற்கு எத்தனை வயசு
ஆனந்த் அம்பானியை விட அவரின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் வயது மூத்தவர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனந்த் - ராதிகா
அம்பானி வீட்டு விஷேசத்தில் தென்னிந்திய உணவுகளை சமைப்பது யார் தெரியுமா? புகைப்படங்களால் லீக்கான தகவல்
இந்தியாவில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி.
இவரின் இளைய மகனுக்கு இன்னும் சில நாட்களில் வெகு பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருக்கின்றது.
இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் ராதிகாவும் ஆனந்த் அம்பானியும் சிறு வயது முதல் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில் இவர்களின் நட்பு காதலாக மாறியது.
பெற்றோர்கள் சம்பதத்துடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் இரண்டும் வெகு விமர்சையாக முடிவடைந்துள்ளது.
வயது மூத்தவர்
இந்த நிலையில் ஆனந்த அம்பானியை விட ராதிகா 1 வயது மூத்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ராதிகா மெர்ச்சண்ட் டிசம்பர் 18, 1994 ஆம் ஆண்டும், ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10, 1995 ஆம் ஆண்டும் பிறந்துள்ளனர்.
வயது மூத்தவர் என்றாலும் தோற்றத்தில் இளையவர் போல் இருக்கிறார். இந்த தகவல் கேட்டு சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்து வருகின்றது.
மேலும் ராதிகாவின் தந்தையான மெர்சண்டிற்கு அம்பானிக்கு நிகரான ரூபாய் 755 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது என்றும் அதில் ராதிகாவின் நிகர மதிப்பு வெறும் 10 கோடி என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |