காதல் தோல்வியை சந்தித்த சினிமா பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா?
சினிமாதுறை என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது அந்தவகையில் சினிமாதுறையில் காதல் தோல்வியை சந்தித்த நடிகைகள் குறித்து இந்த பதிலில் பார்க்கலாம்.
தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக உள்ள திரிஷா குறித்து அவ்வப்போது காதல் தொடர்பில் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளது.இந்நிலையில், நடிகர் ராணாவுடன் நெருக்கமாக இருந்த த்ரிஷா சிறிது காலம் டேட்டிங் செய்து வந்தார். இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகின.
இவர்கள் இருவரின் உறவும் திருமணத்தில் தான் நிறைவுபெறும் என அனைவரும் எதிர்பாத்த நிலையில், துர்திஷ்டவசமாக இருவரும் பிரிந்தனர்.அதைத் தொடர்ந்து ராணா வேறொரு பெண்ணுட்ன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
சமந்தா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளுடன் காதலில் இருப்பதாக சித்தார்த் பற்றிய வதந்திகள் பல அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன. அதுமட்டுமன்றி நடிகை ஸ்ருதிஹாசனுடன் சித்தார்த் நெருக்கமாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் இருவரின் உறவும் முறிந்தது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரேகா மற்றும் அமிதாப் பச்சன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் காதல் தொடர்பு இருப்பதாக குறித்த காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்டடு பின்னர் இருவரும் பிரிந்தனர்.
திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா பிரபல நடிகர் சிம்புவுடன் காதல் தொடர்வில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி, எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்ததன் பின்னர் ஜெய்யுடன் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின ஆனால் சிறிது காலத்தில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
90களில் பிரபல நடிகர்களான நாகார்ஜுனாவும் தபுவும் 2 தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், 10 வருடங்களாக காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும், நாகார்ஜுனா தபுவுடன் ஒரு நல்ல நண்பர்கள் என்று அவர்கள் இந்த விடயம் குறித்து பின்னாளில் ஊடகங்களில் தெளிவுப்படுத்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |