படுத்த படுக்கையாக இருந்த கணவர்... பிரபல நடிகையின் சோகமான வாழ்க்கை
பிரபல நடிகை வினோதினி தனது கணவர் விபத்தில் சிக்கிய போது பட்ட கஷ்டத்தைக் குறித்து தற்போது பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.
நடிகை வினோதினி
நடிகை வினோதினி 1982ம் ஆண்டு மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்பு கதாநாயகியாக வலம்வந்த இவர் பிரசாந்திற்கு ஜோடியாக வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் நடித்திருந்தார. பின்பு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த நிலையில், திருமணத்திற்கு பின்பு நடிப்பை நிறுத்தியுள்ளார்.
விபத்தில் சிக்கிய கணவர்
இந்நிலையில் வினோதினி தனது கணவர் விபத்தில் சிக்கியதை குறித்து விவரித்துள்ளார். ஆம் 2019ம் ஆண்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கணவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் வெறும் பத்தாயிரம் மட்டும் அபராதம் செலுத்திவிட்டு சென்று விட்டார்களாம். தனி ஆளாக கஷ்டப்பட்ட இவருக்கு சிலர் மட்டுமே உதவி செய்துள்ளனர்.
கணவர் குடும்பத்திலிருந்தும் எந்தவொரு உதவியும் கிடைக்காமல் இருந்த இவருக்கு, நடிகர் சங்கத்தினரின் உதவி கிடைத்திருந்தால், விபத்தை ஏற்படுத்தியவர்களை கண்டுபிடித்திருக்கலாம் என்றும் தனியாக நின்று தனது கணவரை மீட்டு கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
என் குடும்பத்திற்காக நான் மட்டுமே இருந்தேன், எப்படியாவது என் கணவரைக் காப்பாற்றி குழந்தைகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |