முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 90ஸ் நடிகை- இப்படியெல்லாம் செய்தார்களா?
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை வினிதா ஒரு கட்டத்தில் முகத்தை மறைத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் காரணத்துடன் செய்தி வெளியாகி வருகின்றது.
நடிகை வினிதா
90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் நடிகை வினிதா.
இவர், தமிழில் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உட்பட பல படங்களில் நடித்தார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இளைஞர்களால் கவரப்பட்ட வினிதா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சரத்குமார், பிரபு எனப் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோயினாக வினிதா வலம் வந்தார். அவரின் முதல் படமே தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
கல்லூரி படிக்கும் போது சினிமா வாய்ப்பு வந்தது. அன்று முதல் தனது ரியல் பெயரான லட்சுமி என்பதை மாற்றி சினிமாவுக்காக வினிதா என மாற்றிக் கொண்டு புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்.
தம்பிக்காக சென்ற இடத்தில் நடந்த கொடுமை
இந்த நிலையில், வினிதாவின் சினிமா வாழ்க்கை சரிய தொடங்கிய பின்னர், வினிதா அவருடைய தம்பியை வைத்து படம் தயாரிக்க முயற்சி செய்து வந்தார்.
அந்த சமயத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ள பலர் முயற்சி செய்து வந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸார் தகவல் அறிந்து வினிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, தனது தம்பியின் படம் சம்பந்தமாக பேசுவதற்காகவே அங்கு சென்றாகவும், பாலியல் தொழில் செய்யவில்லை என்றும் பேட்டிக் கொடுத்துள்ளார்.
மேலும், பாலியல் தொழில் செய்ய என் அம்மா, தம்பி இருவரையுமா? அழைத்து செல்வேன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
முகத்தை மூடிச் செல்ல என்ன காரணம்?
கடந்த 2003ல் வினிதா கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த வருடமே அவர் வழக்கில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
சில வருடங்கள் கழித்து “எங்க ராசி நல்ல ராசி” என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் வர்ணிக்கப்பட்ட நடிகை வினிதா, அதே முகத்தை மூடி மறைத்து நடமாட வேண்டிய சூழ்நிலை வந்தது இது சம்பவம் வினிதாவின் ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |