உயிரோடு இருக்கும்போதே நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதற்கு அவர் போட்ட நக்கல் பதிவு!
பிரபல நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு வைரலாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1999-ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விந்தியா.
இவரின், முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்பின்னர், 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதையடுத்து, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு விந்தியா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார்.
பின்னர் வட்டப்பாறை உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களி நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு, அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. '
அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இதனிடையே, திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம்.
ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. pic.twitter.com/Zsie6obR86
— Vindhyaa (@vindhyaAiadmk) April 27, 2021