30கிலோ எடையைக் குறைத்து சிலிம்மாக மாறிய வரலட்சுமி சரத்குமார்- இப்போ எப்படி இருக்காரு பாருங்க
நடிகை வரலட்சுமி 30கிலோ எடையை குறைத்து சிலிம்மாக மாறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.
திருமணம்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் வரலட்சுமி ரொம்ப குண்டாக இருந்தார்.
பின்னர் சமீப காலத்தில் நிறைய எடையைக் குறைத்து சிலிம்மாக மாறியுள்ளார்.
எடை குறைப்பு
இது குறித்து பேசிய வரலட்சுமி, “எடை இழக்க 4 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்தேன். அத்துடன் எனக்கான வேலைகள் அனைத்தையும் நானே செய்து கொள்வேன்.
தினமும் உடற்பயிற்சியுடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை முக்கியம். மேலும், தியானமும் யோகாவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த இரண்டையும் செய்து வந்தேன். ஆரோக்கியமான உணவு முறையும் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி வரலட்சுமி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |