ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?
காதலரை கரம் பிடித்த நடிகை வரலட்சுமிக்கு அவரது கணவர் கொடுத்த பரிசுப் பொருட்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் - வரலட்சுமி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமண கொண்டாட்டங்கள்
இதற்கு முந்தைய நிகழ்வுகளான மெகந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் பல பிரபலங்கள் சூழ விமர்சையாக நடந்து முடிந்தது.
மேலும் திருமணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சினிமா நட்சத்திரங்கங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் முதலமைச்சர் முதல் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கணவர் கொடுத்த பரிசு
தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில், தனது மனைவி வரலக்ஷ்மிக்கு கணவர் நிக்கோல் ரூ. 200 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்க செருப்பு, வைரம் மற்றும் தங்க நகைகள் போன்ற பரிசு மழையால் மனைவியை அசரவைத்து விட்டார் எனவும் கூறப்படுகின்றது.
மாறாக இந்த தகவல்கள் குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |