நடிகை த்ரிஷா காதல் குறித்து வெளியிட்ட திடீர் பதிவு... குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை த்ரிஷா அழகிய சேலையில் ஒற்றை புகைப்படத்தை பதிவிட்டு காதல் எப்போதும் வெல்லும் என குறிபிட்டு தற்போது வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 20 வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டு இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கின்றார்.
முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இறுதியாக நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துத்திருந்தார். த்ரிஷா, மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்திருக்கிறார்.
தற்போது 41 வயதை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா பட்டு புடவையில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு, காதல் எப்போதும் வெல்லும் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர் குழப்பமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படத்துக்கு அசுர வேகத்தில் வைக்குகள் குவிந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |