புதிய தோற்றத்தில் நடிகை த்ரிஷா... ஒற்றை புகைப்படத்துக்கு குவியும் லைக்குகள்
நடிகை த்ரிஷா தற்போது புதிய தோற்றத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 20 வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டு இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கின்றார்.
முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக நடனமாடியிருந்தார். தற்போது நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகை த்ரிஷா புதிய லுக்கில் வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |