நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட நடிகை த்ரிஷா... தீயாய் பரவும் காணொளி!
நடிகை த்ரிஷா ட்ரெண்டிங் உடையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு Friends vibes என பதிவிட்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. 20 வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டு இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருக்கின்றார்.
முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை கொண்டாடப்பட்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
அதனை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்திருந்த த்ரிஷா, மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 41 வயதை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது நண்பர்களுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |