இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை த்ரிஷா!
நடிகை த்ரிஷா கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால் அதனை தொடர்ந்து த்ரிஷா மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது த்ரிஷா கருப்பு நிற ட்ரெண்டிங் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |