எது ரோஜானே தெரியல... த்ரிஷாவின் புதிய பதிவால் திணறும் ரசிகர்கள்
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவின் புதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பெருமளவான ராசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. இவரை பற்றி சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை.
2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து கில்லி, சாமி, ஆறு உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்போது அஜித், திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகின்றது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா பிங்க் நிற ரோஜாக்களுடன் புகைப்படங்களை வெளியிட்டு Happy Rose Day என பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருவதுடன், ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |