காதல் தேசம் பட நாயகியா இது? 53 வயதிலும் இளமை மாறாமல் இருக்காங்களே!
நடிகை தபு ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை தபு
பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தான் தபு.
அதனை தொடர்ந்து ஒரு சில சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் விஜய்பாத் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யம் அடைந்தார்.
இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக மாறிய தபு தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தழிழில் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்டானதால், தமிழிலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்தார்.
90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம்பிடித்த தபு தற்போது 53 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்க காதல் தோல்வி தான் காரணமாம்.
இந்நிலையில் நடிகை தபு ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே என வியப்பில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |