லப்பர் பந்து பட நடிகை வீட்டில் விஷேசம்- புதுதாலியுடன் எப்படி இருக்காரு பாருங்க
நடிகை சுவாசிகா- பிரேம் தம்பதிகள் அவர்களுடைய முதல் திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சுவாசிகா
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகிய வெற்றி நடைப்போடும் திரைப்படம் தான் லப்பர் பந்து.
இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா என்பவர் நடித்திருப்பார்.
சுவாசிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பலருக்கும் இவர் யாரென்று தெரியாமல் இது தான் முதல் படம் என நினைத்து கொண்டிருக்கின்றனர். மாறாக சுவாசிகா பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டார்.
இவர் நடிப்பில் வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படங்கள் சுவாசிகாவிற்கு பெரிய அளவு வாய்ப்பை எடுத்து தரவில்லை.
இதனை தொடர்ந்து மலையாள திரையுலகிற்கு சென்ற நடிகை சுவாசிகாவிற்கு பட வாய்ப்புக்கள் அடுக்கிக் கொண்டே போனது.
சீரியல் நடிகரை மணந்த சுவாசிகா
இப்படியொரு நிலையில், தமிழ் சினிமாவிற்கு ரீ- என்றி கொடுத்த லப்பர் பந்து படம் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. தொடர்ந்து, சுவாசிகா பற்றிய விவரங்களை ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.
இதற்கமைய சுவாசிகா, விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருடைய கணவர் நீ நான் காதல் என்ற சீரியலில் கதாநாயகராக நடித்து வருகிறார்.
நடிகர் பிரேம் ஜேக்கப், நடிகை சுவாசிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமண நாளில் நடந்த திருமணம்
திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகின்ற நிலையில், திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.
அதாவது, சுவாசிகா- பிரேம் தம்பதிகள் கடந்த ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது.
இதன்படி, இருவரும் முதல் நாளை திருமண நாளையோட்டி தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |