அவர் என் மகளே இல்லை! நேர்காணல் பேட்டியில் நடிகை சுகன்யா வெளியிட்ட பரபரப்பு
சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை சுகன்யாவின் மகள் இவர்தான் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் இது குறித்த உண்மையை பிரபல நடிகை சுகன்யா நேரடியாக கூறியுள்ளார்.
நடிகை சுகன்யா
தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் பல மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் ‘சின்ன கவுண்டர்’ படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
அதுமட்டுல்லாமல் தமிழ் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்தார் . நடிகை சுகன்யா 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
ஆனால் அவரின் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவரின் மகள் என்று வெளிவந்த ஒரு புகைப்படம் பற்றி அவர் தெளிவாக நேர்காணல் ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறும் போது “அந்த புகைப்படத்தில் இருப்பது என் மகள் இல்லை, அது என் அக்கா மகள். அந்த படத்தை நான் தான் என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன்,
அதிலும் என் அக்கா மகள் என்று தான் பதிவிட்டிருந்தேன், ஆனாலும் என் மகள் என்று செய்திகள் பரவி வருகிறது. நான் திருமணமாகி சில மாதங்களிலேயே நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து பிரிந்து விட்டேன்.
இப்படி இருக்கையில் என்னை பற்றி ஏதாவது பரப்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறார்கள் என் அக்கா மகளும் ‘சித்தியால் நான் பேமஸ் ஆகிவிட்டேன். என்று மகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்று நடிகை சுகன்யா கூறியுள்ளார்.