52 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் சுகன்யா! இளம்நடிகைகளை ஓவர்டேக் செய்த புகைப்படம்
நடிகை சுகன்யாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை சுகன்யா
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சுகன்யா. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு மட்டுமே நீடித்தது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2003-ம் ஆண்டே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வரும் இவர், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பதையும் படிப்படியாக குறைத்துக் கொண்டார்.
ஆனால் தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாகி வருகிறார். தற்போது நவரச நாயகன் கார்த்திக்கு ஜோடியாக தீ இவண் படத்தில் நடித்து முடித்துள்ளார் சுகன்யா. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீசாக உள்ளது.
அதேபோல் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது 52 வயதாகும் சுகன்யா, இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம்ம யங்காக காட்சி அளிக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.