பலநூறு கோடிகளை இழந்தேன்! கணவர் பிரிந்துவிட்டார்.. நடிகை சுதா கண்ணீர்
ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா கூறியுள்ளார்.
வசதியாக வளர்ந்தேன்
தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுதா. இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
அவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேசினார். சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நான் குழந்தை பருவத்தில் வசதியாக வளர்ந்தேன். ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது.
தந்தைக்கு புற்று நோய் இருப்பது பற்றித் தெரிந்த பிறகு அனைத்து சொத்துகளும் விற்கபட்டன. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை விற்று எங்களுக்கு உணவளித்தார். சினிமாவில் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.
கடனாளியாகிவிட்டேன்
நடிப்புக்கு பிறகும் ஆனால் மீண்டும், நான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. டெல்லியில் ஒரு ஹொட்டலை திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன்.
ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறேன். எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான். என்னிடம் தகராறு செய்து சென்றதோடு என்னுடன் பேசவில்லை.
கணவரும் என்னை பிரிந்துவிட்டதால் தனிமையில் இருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.