திருமணமாகி 4 ஆண்டுகளில் கணவரை பிரியும் நடிகை! என்ன காரணம் தெரியுமா?
பிரபல கன்னட திரைப்பட நடிகையும், 'பிக்பாஸ்' பிரபலமுமான சுபா பூஞ்சா, தனது காதல் கணவரை பிரிந்து வாழ விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சுபா விவாகரத்து
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சுபா பூஞ்சா உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபரும், கன்னட செயற்பாட்டாளருமான சுமந்த் பில்லவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்டார்
இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். தற்போது திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் சுபா தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இருவருடைய சம்மதத்துடன் விவாகரத்து கோரி பெங்களூருவில் உள்ள குடும்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோர்ட்டு நடைமுறைகளின்படி, இந்த விவாகரத்து மனு மீதான விசாரணைக்காக நடிகை சுபா பூஞ்சாவும், சுமந்த் பில்லவாவும் கோர்ட்டு அறிவிக்கும் விசாரணை தேதியில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு முற்பட்டிருப்பது அவர்களது ரசிகர்களிடையே வருதத்தை தந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக சுபா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வது எதற்காக என்று இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |