இதற்காகவே நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? பிரபலம் வெளியிட்ட பகீர் உண்மை
நடிகை ஸ்ரீதேவி அவரது பெயரில் வைத்திருந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டுள்ளதாக சினிமா விமர்சகரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பரும் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. கோலிவுட், பாலிவுட் என நடித்துவந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
நடிகை ஸ்ரீதேவி இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக ஸ்ரீதேவியை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பே லிவ் இன் டூ கெதர் வாழ்ந்து கர்ப்பமான இவர், ஜான்வி, குஷி என இரண்டு மகள்களை பெற்றார்.
கடந்த 2018ம் ஆண்டு திருமண நிகழ்வு ஒன்றிற்கு துபாய் சென்றிருந்த நேரத்தில் அங்கு பாத்ரூமில் வழுக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டு இந்தியாவிற்கு உடல் எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
ஆனால் இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீதேவி குடும்ப நண்பரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மர்ம மரணம் கொலையா?
அதாவது நடிகை ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுவது பொய் என்றும் இவரது ஸ்ரீதேவியை பணத்திற்காகவே போனி கபூர் திருமணம் செய்து கொண்டார் என்றும், போனிகபூருக்கு ஸ்ரீதேவி வயதில் ஒரு மகன் இருப்பதும் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு மட்டுமின்றி மரணத்திற்கும் அவரது பணம் தான் முக்கிய காரணம் என்று கூறியதோடு, ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடி இன்சூரன்ஸ் இருந்ததால் கொல்லப்பட்டாரா என்று கேட்ட கேள்விக்கு, ஆமாம் ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் அதிகமாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
மோடிக்கு நெருக்கமானவராக இருந்ததால் போனி கபூர் தப்பித்துவிட்டதாகவும், ஸ்ரீதேவி என்ன தியாகம் செய்தார் என்று அவரது உடம்பிற்கு தேசிய கொடி போர்த்தினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும் டாக்டர் காத்தராஜ் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |