24 வயதில் பான் இந்தியா ஸ்டார்! மருத்துவர் பட்டம் பெற்ற நடிகை ஸ்ரீலீலா.. குவியும் வாழ்த்துக்கள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா தனது 24 வயதில் மருத்துவ படிப்பை முடித்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் சென்ஷேசனல் நடிகையாக வலம் வரும் வருபவர் தான் நடிகை ஸ்ரீலீலா.இவர் 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமாகியது.

ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
இறுதியாக சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடித்த பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நடிகை கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.

இவர் பராசக்தி படப்பிடிப்பின் போது, தனது இறுதி பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாகவும் நடிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டே தான் தனது மருத்துவ படிப்பையும் முடித்ததாக, நடிகர் சிவகார்த்திகேயன் பாராசக்தி திரைபட promotion பேட்டியொன்றில் ஸ்ரீலீலாவை பற்றி பெருமையாக பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டமளிப்பு விடழாவின் போது எடுக்கப்ட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |