நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன்பு கேட்ட 2 பொருள்கள்.... பலவருடம் கழித்து உடைந்த உண்மைகள்
மறைந்த நடிகர் சௌந்தர்யா இறப்பதற்கு இரண்டு பொருட்களை மட்டும் கேட்டதாக அவரது உறவினர் கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சௌந்தர்யா
தமிழ் சினிமாவில் 90களின் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் தான் சௌந்தர்யா. இவர் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி இவர்களுடன் நடித்து பிரபலமான நிலையில், இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் வலம்வந்தார்.
இயக்குனர் ஆர் வி உதயகுமாரின் இயக்கத்தில் பொன்னுமணி எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது.
பின்பு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், அரசியலில் இறங்க முடிவு செய்தார். 2004ம் ஆண்டு பாஜக சார்பாக பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற இவர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இவரது மரணத்தில் இன்று வரை பல மர்மங்கள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இறப்பதற்கு முன்பு கடைசியாக சௌந்தர்யா கேட்ட பொருள் குறித்து அவர் அண்ணி கூறியுள்ளார்.
அதாவது சௌந்தர்யா இறப்பதற்கு முன்னர் காட்டன் புடவை, குங்குமம் இது இரண்டையும் கேட்டதாக அவரது அண்ணி பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |