முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்!
தளபதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியினர் குடும்பத்துடன் முதல்வர் விஜயை சந்தித்துள்ள புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைராலாகி வருகின்றது.

சினேகாவின் பதிவு
நடிகை சினேகா தனது பதிவில்,
விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றிய நிலையில், இன்று அவரை முதல்வர் ஜோசப் விஜய் கதாபாத்திரத்தில் பார்ப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் தருகிறது.
சில தருணங்கள் நம்மைப் பேச முடியாமல் ஆக்கிவிடும். அவரது பயணம், வளர்ச்சி மற்றும் அவர் சம்பாதித்த மரியாதை ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.
இருப்பினும், நான் அறிந்த அதே பணிவான, அன்பான மற்றும் எளிமையான மனிதர் இன்றும் அவரிடம் இருக்கிறார் என்பதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது. அவருக்கு எப்போதும் வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். என உருக்கமான பதிவுடன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |