சினிமா மட்டுமின்றி பிசினஸில் கலக்கும் நடிகை சிம்ரன்... லட்சக்கணக்கில் குவியும் வருமானம்
நடிகை சிம்ரன் சினிமாவில் மட்டுமின்றி தனியாக பிசினஸ் செய்தும் வருமானம் பெற்று வருகின்றார்.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90களில் கனவுக்கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரன், 1997ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார்.
மும்பையிலிருந்து வந்தவராக இருந்தாலும், புடவை கட்டினால் அச்சு அசல் தமிழ்நாட்டு பெண் போன்று தான் காணப்படுவார்.
தனது இயல்பான நடிப்பினால் பல விருதுகளையும் வாங்கியுள்ள இவர், தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சில ஆண்டுக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி ரிவி நிகழ்ச்சியினை தயாரிக்கவும், நடுவராகவும் பங்கேற்ற இவர் வேறொரு பிசினஸ் செய்து வருகின்றார்.
சிம்ரனின் ஹொட்டல் பிசினஸ்
ஆம் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் கோட்கா என்ற பெயருடன் ஹொட்டல் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
இந்த நட்சத்திர ஹொட்டலானது காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 வரை செயல்படும். ஆனால் இந்த ஹொட்டலில் உணவுகளின் விலைபட்டியல் அனைவரையும் தலைசுற்றவே வைக்கின்றது.
குறித்த ஹோட்டலில் 2 பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிளை புக் செய்ய ரூ.700 கட்டணம். ரூ.300-க்கு ஆப்லெட் வகைகள் கிடைக்குமாம்.
ஒரு காலிக் பிரெட்டின் விலை ரூ. 130 ஆகும். பேபி கார்ன் ரூ.280க்கும், சிக்கன் லாலிபாப் ரூ.280க்கும், நண்டு ஃபிரை ரூ.380க்கும் விற்கப்படுகிறது.
மேலும் அனைத்து சைவ உணவுகளும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ.1000 என்றும், அதுவே அசைவ உணவுகள் அடங்கிய தட்டின் விலை ரூ.1500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீம் வகைகள் ரூ.150-ல் இருந்து தொடங்குகிறது. சாக்லேட் பிரவுனி 280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்த ஹொட்டல் மூலமும் சிம்ரனுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |