நடிப்பை தாண்டி ஹோட்டல் பிசினஸ் செய்துவரும் நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகை சிம்ரனுக்கு தற்போது 47 வயதாகும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதை விபரமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்ரன் சொத்து மதிப்பு
நடிகை சிம்ரன் மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார். 1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் என்பது இவரின் முதல் படமாகும்.
இதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
இவர் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார். Godka by Simran எனும் பெயரில் சிம்ரன் Restaurant நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் உணவுகளின் விலை எல்லாம் அதிகமாகவே இருக்கும்.
ஆம்லெட் விலை மட்டுமே ரூ. 300 இருந்து ஆரம்பித்து சாதாரண கார்லிக் பிரெட்டின் விலை 130, பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280 என எல்லாமே ஹைக்ளாஸ் பட்ஜெட்டில் தான் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ. 1000 ஆகுமாம். இந்த ஹோட்டலின் மூலம் சிம்ரனுக்குநாள் ஒன்றிற்கு 10 லட்சம் வரை வருமானம் வருமானம் கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி பார்த்தால் ஆண்டிற்கு கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சிம்ரன். தற்போது இவர் சினிமாவில் நடிக்க ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
