ராணியை உருவாக்குவது கிரீடம் அல்ல இதயம் தான்- மனைவி புகழ்ந்து தள்ளிய அர்ஜுன்
“ராணியை உருவாக்குவது கிரீடம் அல்ல இதயம்” என புகழ்ந்து புகைப்படங்கள் வெளியிட்ட ஸ்ருதிகா கணவரின் பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும். இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.
இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். இவர் கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
மனைவி புகழ்ந்து தள்ளிய கணவர்
இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இவருக்கு வரவர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேசெல்கிறது.
இதனை தொடர்ந்து ஸ்ருதிகாவின் வளர்ச்சிக்கு அவருடைய கணவர் அர்ஜுன் முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
அந்த வகையில் ஸ்ருதிகாவின் சமூக வலைத்தளங்களை அவருடைய கணவர், அர்ஜுன் கவனித்து வருகிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்ருதிகாவின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் கீழ், “ராணியை உருவாக்குவது கிரீடம் அல்ல இதயம்..” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ஸ்ருதிகா ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அத்துடன், “ஸ்ருதிகா முயற்சி பாராட்டத்தக்கது..” என கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |