40 நாட்களில் 7 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் நடிகை ஸ்ருதிகா
இன்றைக்கு பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான், உணவை தவிர்த்தல், துரித உணவுகள், உடற்பயிற்சி இல்லாதது, கொழுப்பு நிறைந்த உணவுகள் என உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.

தற்போது பலரும் டயட், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், அந்த வகையில் 7 நாட்களில் 40 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் நடிகை ஸ்ருதிகா, சூர்யாவின் ஸ்ரீ படத்தில் அறிமுகமான ஸ்ருதிகா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது, எதார்த்தமான பேச்சு, குழந்தைதனமான நடவடிக்கைகள் என ரசிகர்களை கவர்ந்தார், தொடர்ந்து இந்தி பிக்பாஸ் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார்.

ஆடை மற்றும் அழகுசாதன பொருட்களை விற்பனை செய்து தொழிலதிபராகவும் வலம்வருகிறார், தனக்கு பக்கபலமாக தன்னுடைய கணவர் அர்ஜீன் இருப்பதாக பல பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார்.

உடல் எடை குறைப்பின் போது, டீ மற்றும் காபியை முற்றிலுமாக தவிர்த்தாக கூறுகிறார் ஸ்ருதிகா, இதனுடன் உணவு கட்டுப்பாடும் அவசியம். பால், சர்க்கரை சேர்க்கப்பட்ட டீ, காபியில் 100 முதல் 150 கலோரிகள் வரை இருக்கும் என்றும் இதை தவிர்க்கும் போது உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என கூறுகின்றனர் நிபுணர்கள்.