41 வயதில் திருமணம் செய்யாமல் அழகில் ஜொலிக்கும் நடிகை... ரசிகர்களை வாய்பிளக்க வைத்த காணொளி
பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதியின் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. சின்னத்திரையில் ஹோம்லியான தோற்றத்தில் நடித்து தனக்கான இடத்தினை தக்கவைத்துள்ளார்.
இவர் முதலில் அறிமுகமாகியது வெள்ளித்திரை என்றாலும் இவரை சின்னத்திரை தான் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை கொடுத்ததுடன், பயங்கர பிரபலமாக்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்களில் நடித்த இவர், அடுத்தடுத்து வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரையில் கால் பதித்தார்.
முதன்முதலாக பிரபல ரிவியில் தேவயானி நடித்த கோலங்கள் என்ற தொடரில் பிரபா கேரக்டரில் நடித்தார். அதன் பின்பு தென்றல் சீரியல். துளசி என்றால் நினைவுக்கு வருவது ஸ்ருதி ராஜ்தான். தனது எதார்த்தமான நடிப்பால் அனைத்து வயதினரும் ரசிக்கும்படி நடித்திருப்பார். இந்த தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
ஆறு வருடங்கள் ஓடிய இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக 2012ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் வழங்கிய சிறந்த ஜோடிகள் விருதும் மற்றும் 2014ஆம் ஆண்டு வழங்கிய சிறந்த நடிகை, தேவதைகள் விருது மற்றும் சிறந்த ஜோடி போன்ற விருதுகளை வென்றார். இந்த தொடரின் தெலுங்கு பதிப்பில் இவரே கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின்பு ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள், அழகு என பல தொடர்களில் நடித்து வந்த இவர் தற்போது தாலாட்டு என்ற புதிய சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ஜோடியாக, தெய்வ மகள் புகழ் கிருஷ்ணா நடித்து வருகின்றார்.
41 வயதை கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார் ஸ்ருதி. சீரியல்களில் ஹோம்லியா நடித்தாலும் அவ்வபோது மார்டன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
சீரியல்களில் புடவையில் ஜொலிக்கும் இவருக்கு, மாடர்ன் உடை அணிந்து கொள்வது தான் மிகவும் பிடிக்குமாம்.
தற்போது வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தீயாய் பரவி வருவதுடன், ரசிகர்கள் இவரை காதலிப்பதாகவும், இவரின் அழகை வர்ணித்தும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
