ஒரே மாதத்தில் குறைந்த 7 கிலோ உடல் எடை... பிரபல நடிகையின் டயட் என்ன?
பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஒரு மாதத்தில் 7 கிலோ எடையை குறைத்துள்ள நிலையில், அவர் கொடுத்த டிப்ஸ் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
நடிகை ஸ்ரேயா அஞ்சன்
சின்னத்திரை நடிகையான ஸ்ரேயா அஞ்சன், அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணம் என்ற சீரியலில் அறிமுகமான அதில் ஜோடியாக நடித்த சித்து சித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா, ரஜினி என்ற தொடரில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரேயா ஒரே மாதத்தில் 7 கிலா வரை எடையைக் குறைத்துள்ளார். எடையைக் குறைக்க அவர் எடுத்த டயட் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
நடிகை ஸ்ரேயாவின் டயட்
நடிகை ஸ்ரேயா தனது உடல் எடையைக் குறைக்க காலையில் வெறும்வயிற்றில் ஊற வைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளியை சாப்பிட்டுள்ளார்.
பின்பு பாலக்கீரை, புதினா சேர்த்து நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்தும் வெறும் வயிற்றில் குடித்துள்ளார். அதிகமாக காய்கறிகளை சேர்த்துள்ளார்.
மாலை நேரத்தில் வேக வைத்த கறுப்பு கடலை, சுண்டலை இவற்றினை எடுத்துள்ளார். காலையில் 20 நிமிடம் நடைபெற்று மேற்கொண்டு, ஒரே மாதத்தில் 7 கிலோ தனது உடல் எடையைக் குறைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |