தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கு மழைப்பாடல் ஒரு திட்டமிட்ட கொலை
மழைப்பாடல்களில் வெளிப்படையான ஆடை அணிந்து ஆடும்போது தமிழ் நடிகைகள் பட்ட கஷ்டம் கடினமானது என மனம் திறந்தார் நடிகை ஷோபனா.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலம் வாய்ந்த நடனக் கலைஞர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோபனா அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சினிமாவில் டூயட் போட்டு ஒரு கலக்கு கலக்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சுஹாசினியுடனான நேர்க்காணலில் தனது பட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் ஷோபனா.
image credit:cine ulagam
தமிழ்சினிமா ஹீரோயின்களை பொறுத்தளவில் மழைப்பாடல் ஒரு திட்டமிட்ட கொலை!
ரஜினிகாந்தோடு சிவா எனும் திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மழை பாடலொன்றுக்கு வெளிப்படையான ஆடையை தான் ஷோபனாவிற்கு அணிவதற்கென வைத்திருந்தார்களாம்.
அதைக்கண்டதும் இது ஒரு மழைப்பாடலாக தான் இருக்கவேண்டும் என அவர் நினைத்துக்கொண்டராம் மற்றும் தனக்கு உள்ளே அணியக்கூட ஒன்றுமில்லை எனக்கூற காஸ்ட்யூமர் இன்னும் 10 நிமிடங்களில் ஷூட் ஆரம்பித்துவிடும் எனக்கூற மேசையிலுள்ள பொலித்தீன் ஷீட்டை பாவாடைக்குள்ளே கட்டிக்கொண்டு தயாரானாராம்.
"Thalapthy டா .. Thalapathy Heroine டா" - Actress Shobana in #SomethingSpecial with Suhasini Maniratnam
— Cineulagam (@cineulagam) April 11, 2023
▶️WATCH: https://t.co/H8z1Gq5C5y#Shobana #Suhasinimaniratnam #ShobanaChandrakumar #Rajini #Rajinikanth #Thalapathy #actressshobana @shobana_actor @hasinimani #ManiRatnam pic.twitter.com/RH9K1Azwye
எனவே இந்த மழைப்பாடல் ஒரு திட்டமிட்ட கொலை என அவர் கூறுகிறார். தளபதிப்படத்தை பற்றி கூறியபோது ஒருநாள் ரஜினிகாந்த் அவர்கள் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
அந்த காலத்திலே அவ்வளவு தொழில்நுட்பம் இல்லாத காரணத்தினால் மிகவும் நேரம் காலம் செலவிட்டு அப்படத்தை தயார் செய்தார்களாம்.
மற்றும் அதிகாலை படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரும்போது ஏன் ஒருவரால் வரமுடியாது என இயக்குனர் மனிரத்னம் கூறிய வார்த்தையை என்னால் மறக்கமுடியாது.
அந்த 300 பேரில் நானும் ஒருத்தி என மகிழ்ச்சியாக தனது படப்பிடிப்பு அனுபவங்களை ஷேர் செய்துக்கொண்டார் நடிகை ஷோபனா.