சாதாரண நடிகை ரூ.53,800 கோடிக்கு சொந்தகாரியானது எப்படி?
ரூ.53,800 கோடி சொத்து மதிப்பு சொந்தகாரியான நடிகை பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை ஷர்மின் சேகல்
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் மருமகளாக இருப்பவர் தான் நடிகை ஷர்மின் சேகல்.
இவர், கடந்த 2019-ல் malaal என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கடந்த 2023-ல் தொழிலதிபர் அமான் மேத்தாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
மற்ற சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் நெப்போடிசத்தின் உதவியால் திரைத்துறைக்குள் நுழைந்தவர்கள் தான் அதிகம்.
ரூ.53,800 கோடி சொத்துக்களா?
இந்த நிலையில், நடிகை ஷர்மின்யின் தந்தை தீபக் திரைத்துறையைச் சேர்ந்தவர், தாய் பீலா படத்தொகுப்பாளராக இருந்தார். அத்துடன் அவருடைய தாத்தா மோகன் பிரபல இயக்குநராக சுமாராக 40 வருட காலம் சினிமாவில் இருந்தார்.
பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், சசி கபூர், அசோக் குமார் உள்ளிட்ட பலரையும் வைத்து திரைப்படம் இயக்கியிருக்கிறார்.
ஷர்மின்யின் முதல் திரைப்படம் சரியானதொரு வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து, “Atithi Bhooto Bhava” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
சினிமாவில் சாதிக்க முடியாது என தெரிந்து கொண்ட நடிகை ரூ.53,800 கோடிக்கு சொந்தக்காரரான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |