கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்! நடிகை ஷகிலா பரபரப்பு புகார்
நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் தாக்கிய நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஷகிலா
மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகை நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. இவர் தமிழ் படங்களான அழகிய தமிழ் மகன், சிவா மனசுல சக்தி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பிரபலங்களை நேர்காணல் நடத்தி வருகின்றார். இவர் ஷீத்தல் என்ற பெண்ணை 6 மாத குழந்தையிலிருந்து தத்தெடுத்து தனது பெண்ணாக வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் ஷீத்தல் அவரது உண்மையான தாய் சசி, சகோதரி ஹமீலா உடன் சேர்ந்து நடிகை ஷகிலாவை கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர்.
மேலும் இடையில் தடுக்க வந்த ஷகிலாவின் வழக்கறிஞர் சௌந்தர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஷகிலா காவல்நிலையத்திற்கு சென்று வளர்ப்பு மகள் ஷீத்தல் மற்றும் அவரது தாய், சகோதரி மீது புகார் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |