கணவர் வெளியிட்ட காணொளியால் கடுப்பான செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா…
செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார். ஆனால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
அதனை தொடர்ந்து ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ஆர்யன் தான் ஷபானாவை காதலித்து வந்த போது ரகசியமாக சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளியை தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ஷபானா கமெண்டில் ‘இப்போவே டெலீட் பண்ணுங்க இதை’ என கூறி இருக்கிறார். ஆனாலும் ஆர்யன் இந்த பதிவை நீக்கவில்லை. குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |