விஜயுடன் நடித்த நடிகை சங்கவியின் மகளா இது? வைரலாகும் குடும்ப புகைப்படம்
சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது 90s நடிகை சங்கவியின் குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
நடிகை சங்கவி
தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் சங்கவியும் ஒருவர்.

இவர் விஜய் உடன் விஷ்னு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

கிட்டத்தட்ட பதினைந்து வருட திரையுலக வாழ்க்கையில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்த இவர் திருமணத்தின் பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

வெங்கடேஷ் என்ற ஐடி ஊழியரை மணந்த சங்கவிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறார். மகளுக்கு சான்வி என அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை சங்கவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |