இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சமந்தா! மனதை மாற்றிய ஆண்நபர் யார்?
நடிகை சமந்தா அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இரண்டாம் திருமணம்
இந்நிலையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருகிறாராம் சமந்தா.
விரைவில் அவர் நல்ல செய்தி சொல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.