திருமணத்திற்கு பின் ரேவதிக்கு இப்படியொரு நிலைமையா? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேவதிக்கு, திருமணத்திற்கு பின்பு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ரேவதி
மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 80, 90 காலங்களில் பல மொழிகளில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை ரேவதி. இவரின் குழந்தைத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் அடிமை என்றே கூறலாம்.
அஞ்சலி, அரங்கேற்றவேளை, புதுமைப்பெண், தேவர்மகன் போன்ற படங்களில் இவரின் நடிப்பு இன்று வரை யாராலும் மறக்க முடியாதது. தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.
திருமணத்தில் பிரிவு
கடந்த 1986ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றனர்.
பின்பு 2003ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இவர் தனது 47ம் வயதில் பெண் குழந்தை ஒன்றினை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறிய நிலையில், ஆனால் தனது பெண்குழந்தையை தானே பெற்றெடுத்த குழந்தை என்று ரேவதி உண்மையை வெளியுலகிற்கு அறிவித்தார்.
தற்போது இவர் திருமணத்திற்கு பின்பு சினிமா வாய்ப்பு குறைவதற்கான காரணம், இவரது முகமாற்றம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பின்பு இவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் இவருக்கு வாய்ப்பு வருவதைக் குறைத்துள்ளது என்று பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது உண்மை அம்பலமாகியுள்ளது.