நீதா அம்பானியை ஓவர் டேக் செய்யும் பிரபலம்- ஒரு புடவை இவ்வளவா?
பொதுவாக தற்போது இருக்கும் பிரபலங்கள் பலர் தங்களை விளம்பரத்திற்கு கொள்வதற்காக தரம் உயர்ந்த ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இது இந்தியா போன்ற பல நாடுகளில் பிரபலமாக இருந்து வருகின்றது.
இந்தியாவை பொறுத்தவரையில் நீதா அம்பானி தான் அதி உயர் ஆடைகளை அணிவார். அவரையே ஓவர் டேக் செய்யும் வகையில் பிரபலம் ஒருவர் அணியும் புடவைகள் கோடிகளில் மதப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரேகா என்ற பிரபலம் எந்த உடை அணிந்தாலும் அதனை நேர்த்தியாகவும், தரமாகவும் அணிய வேண்டும் என நினைப்பார். பட்டுப் புடவைகள் அணியும் பொழுது அந்த புடவைகள் பெரும்பாலும் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும்.
ரேகாவின் புடவை தெரிவுகள்
அதன் வேலைப்பாடுகள் கையால் மைக்ரோ பிரிண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்டதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இப்படியொரு நிலையில் சமீபத்தில் ரேகா ஒரு விழாவுக்கு ஜரிகை சேலையில் பிளாக் பார்டர் மெட்டாலிக் சேலையை அணிந்து வந்திருந்தார். அதனை பார்ப்பதற்கே வித்தியாசமாகவும் ராயல் தோற்றத்திலும் இருந்தது.
இவர் அணிந்திருந்த பனாரசி பட்டு சேலை தங்கம் மற்றும் ஸ்கை புளு நிறத்தில் இருந்தது. அத்துடன் சேலை, கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மைக்ரோ பிரிண்ட் என தெரியவந்துள்ளது.
அதே சமயம் ரேகா அணியும் காஞ்சிபுரம் பட்டு சேலையில் தூய தங்க ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இருக்கும். இந்த சேலைக்கு தனித்துவமான சிறப்பு உள்ளது.
150 வயது பழைமையான சேலை
பொதுவாக நீதா அம்பானி அரசர்கள் மற்றும் பழைமை வாய்ந்த ஆடைகளை தான் அணிவார். இதன் விலையும் கோடிகளில் இருக்கும். இதன்படி, 150 ஆண்டுகள் பழமையான வெள்ளை மற்றும் தங்க நிற சௌகோஷியா நட்சத்திர பட்டு சேலையை அணிந்துள்ளார்.
லேசான பேட்ச் வொர்க் கொண்ட ஜரிகை பார்டர் முழு உடைக்கும் அற்புதமான தோற்றம் கொடுத்துள்ளது.
இது போன்ற சேலைகள், வெகு தொலைவில் இருந்து பார்க்கும் பொழுதே பிரகாசிக்கும்.
இவற்றை விட சில சேலைகளில், கசவு பட்டு,பருத்தி துணியால் பார்டர் மற்றும் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |