இப்படியும் ஒரு ஆடையா? புதிய தோற்றத்தில் களமிறங்கிய ரெஜினா கசாண்ட்ரா!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட டிசைனர் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கரமித்து வருகின்றது.
ரெஜினா கசாண்ட்ரா
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி இருந்தமையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து அவரது கரியரில் உச்சபட்சமாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ரெஜினா தற்போது ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |