புடவையில் தேவதையாக இருந்த நடிகை ரம்யா பாண்டியன்... வைரலாகும் புகைப்படம்
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை ரம்யா பாண்டியன்
தமிழில் ஜோக்கர் என்ற படத்தின் மூலமாக அறிமுகமான ரம்யா பாண்டியன், தனது நடிப்பு திறமையினால் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாமர்த்தியமாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய இவர், கடந்த ஆண்டு லோகன் தவான் என்ற யோகா ஆசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போதும் புடவையில் படவிழாவிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

அட்டகாசமாக புடவையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |