Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா- ஜோடியாக நெகிழ்ந்த தருணம்
Show முடிந்த கையோடு கணவரை பார்க்க கிளம்பிய ரம்பா, கணவருடன் இருக்கும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.
இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார்.
கணவருடன் ரம்பா
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "Jodi are you ready" என்ற நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக கம்பேக் கொடுத்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரம்பாவை பார்ப்பதால் அந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
Jodi are you ready நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரியோ மற்றும் ஏஞ்சலின் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அத்துடன் இன்னும் சில எபிசோட்களில் முடியவடையவுள்ள நிலையில், தற்போது கணவருடன் கடற்கரையில் ஒன்றாக அமர்ந்திருக்கும் காணொளியை ரம்பா பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள், “ஷோ முடிந்துவிட்டதா? ” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
