நான் இப்போ ஹீரோயினா இருந்தா இந்த ஹீரோ கூட தான் நடிக்க ஆசை: நடிகை ராதா ஓபன் டாக்
நடிகை ராதா தான் நடிக்க விரும்பும் ஹீரோக்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளமை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராதா
1980 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா.
பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு மேல் தென்னிந்திய சினிமா துறையில் கொடிகட்டி பறந்த அவர் 1991 ஆம் ஆண்டு கடைசியாக சாந்தி என் சாந்தி படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்ததன் பின்னர் சினிமாதுறையில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நடுவராக ரீ என்றீ கொடுத்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ராதா தான் மட்டும் தற்போது ஹீரோயினாக இருந்தால் யார் யாருடன் நடிக்க விரும்புகின்றீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதிலை வழங்கியுள்ளார்.
அஜித், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பறம் விஜய் கூட ஒரு டான்ஸ் ஆடணும், சூர்யா கூட ஒரு எமோஷனல் ரோல் பண்ணனும் என குறிப்பிட்டதுடன் எல்லாரும் ஸ்பெஷல் தான் என மிகவும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த வெளிப்படையாக பதில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |