கருப்பு சேலையில் மெழுகு பொம்மை போல் மாறிய ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்
அரண்மனை படத்தில் அசத்திய நடிகை ராஷி கண்ணா தற்போது கருப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷி
கண்ணா தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராசி கண்ணா. 2013 ஆம் ஆண்டு ஜான் ஆபிரகாம நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். தொடர்ந்து விஷாலின் அயோக்கிய, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் படமான அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தற்போது கருப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |