மினுமினுக்கும் உடையில் மெழுகு சிலை போல் மாறிய நடிகை ராஷிகண்ணா... எப்படி இருக்காங்கன்னு பாருங்க
நடிகை ராஷிகண்ணா சிவப்பு நிற ட்ரெண்டிங் ஆடையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
நடிகை ராஷிகண்ணா
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராசி கண்ணா.

2013 ஆம் ஆண்டு ஜான் ஆபிரகாம நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஷாலின் அயோக்கிய, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இறுதியாக தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.

சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் நடிகையான ராஷிகண்ணாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 11.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில் மினுமினுக்கும் சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருவதுடன் மின்னல் வேகத்தில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |