நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ராதிகா தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.
நடிகை ராதிகா
எம்.ஆர்.ராதாவின் மகளான நடிகை ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமானார்.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த இவரை, பாரதிராஜா எதார்த்தமாக பார்த்துள்ளார். ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத இவரிடம், பாரதிராஜா பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.
இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில், அடுத்தடுத்து பல படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு குறைய ஆரம்பித்த நிலையில், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். சினிமா மட்டுமின்றி சீரியலிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
இயக்குநர் பிரதாப் போத்தனை திருமணம் செய்த இவர், அவரை விவாகரத்து பெற்ற பின்பு, நடிகர் சரத்குமாரைக் காதலித்து திருமணம் செய்ததுடன், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
சொத்து மதிப்பு என்ன?
இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடிவரும் ராதிகாவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராதிகாவிற்கு மொத்தம் 120 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு பிரமாண்டமான வீடு உள்ளதாம்.
மேலும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் மூலமும் அவருக்கு வருமானம் வருவதாகவும் பேசப்படுகின்றது.