40 வயதாகும் நடிகை பிரியாமணியின் சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா?
இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை பிரியாமணியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியாமணி
கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா மணி.
2006 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பொற்றார்.
தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த பிரியாமணி, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் நடித்த பிரியாமணி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்தி மயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியாமணியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவருக்கு மொத்தம் ரூ. 60 கோடி அளவில் சொத்து மதிப்பு இருக்கிறாம்.
ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரியாமணிக்கு பெங்களூரில் பிரம்மாண்ட வீடு, சென்னை மற்றும் மும்பையிலும் வீடுகள் உள்ளதாம். விலையுயர்ந்த கார்களும் அவரிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |