பிக்பாஸில் “அந்த” நபர் பேசியதை பார்த்து உடைஞ்சிப் போன ரஞ்சித்தின் மனைவி- ஓபன் டாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவர் குறித்து போட்டியாளர் ஒருவர் பேசியது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது என ரஞ்சித்தின் மனைவி ப்ரியா ராமன் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது. வழமையாக பிக்பாஸ் ஆரம்பித்தவுடன் பல பிரபலங்கள் விமர்சனங்கள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் இப்போது நடிகை மாயா கிருஷ்ணனும் பிக்பாஸ் ரிவ்யூ கொடுத்து வருகிறார்.
இதுவரையில் இல்லாத வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இரண்டு குழுவினராக பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசன்களில் ஆண், பெண் என அனைத்து பிரபலங்களும் சமம் என்கிற ரீதியில் தான் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படுவார்கள்.
இருந்த போதிலும், கடந்த சீசனில் ஆண் போட்டியாளரான பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண் போட்டியாளர்களில் மாயா, பூர்ணிமா உட்பட ஒரு சிலர் புகார் செய்த காரணத்தினால் இந்த சீசனில் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் குறித்து மனந்திறந்த மனைவி
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் தான் நடிகர் ரஞ்சித். இவர் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த வில்லன்களில் ஒருவர்.
ரஞ்சித்தின் மனைவி நடிகை பிரியா ராமன் கணவரின் பிக்பாஸ் விளையாட்டு குறித்து பேசுகையில், “ ரஞ்சித் பேசும் பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் கிண்டலாக பேசுகிறார். இவர்கள் அவரை மாத்திரம் கிண்டல் செய்யவில்லை. மாறாக அவர் போல் சமூகத்தையும் கிண்டல் செய்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் என்னிடம் கூறி வறுத்தப்படுகிறார்கள்.
இன்னும் நாட்கள் இருக்கிறது உங்கள் பிரதிநிதியாக தான் ரஞ்சித் போயிருக்கிறார். அதனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறேன்...” பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து கவலையாக பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இப்படியான பிரபலங்களும் இன்றும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |