சகுனி பட நடிகை பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்
நடிகை பிரனீதாவிற்ர் தற்போது 2 ஆவது குழந்தை பிறந்துள்ள நிலையில், குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை பிரனீதா
கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதிக்கு ஜோடியாக உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் பிரனீதா சுபாஷ்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரனீதா சுபாஷ். இவர் தமிழில் நடிகர் கார்த்திக், சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடைசியாக பிரனீதா சுபாஷ், அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழில், வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், சீக்கிரமாகவே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய , தன்னுடைய நெருங்கிய நண்பரான தொழிலதிபர் நித்தின் ராஜ் என்பவரை நீண்ட நாள்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் இருந்து விலகினாலும், சமூக வளைதளங்களில் எப்போபதும் ஆக்டீவாக இருக்கும் இவர், திருமண புகைப்படங்கள் தொடக்கம் கர்ப்பமாக இருப்பது முதல் குழந்தை பிறந்தது என அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் தனது இரண்டாவது ஆண்குழந்தை பிறந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது தனது சமூகவளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |