திடீர் திருமணம் எதற்காக? ரத்தத்தில் எழுதியிருந்த கடிதம்! பாக்கியராஜ் மனைவியின் பல ஆண்டு உண்மை
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தனது திடீர் திருமணத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளது ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
80ஸ் கிட்ஸ்களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் பூர்ணிமா பாக்யராஜ். இவர் நடிகர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு சரண்யா, சாந்தனு என்று இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், தனது திருமணத்தை குறித்து வெளிப்படையாக பூர்ணிமா பேசியுள்ளார்.
இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில், சில காலம் கழித்து திருமணம் செய்வதற்கு முடிவு செய்திருந்தார்களாம். அப்பொழுது பூர்ணிமா கையில் 35 படங்கள் கிட்ட முடிக்காமல் இருந்ததாம்.
இந்நிலையில் பாக்யராஜ் எம்ஜிஆரை சந்தித்து பேசிய போது திருமணம் குறித்தும் பேசியுள்ளார். உடனே எம்ஜிஆர் இந்த தேதியில் திருமணத்தை வைத்துக்கொள்ள கூறியுள்ளார்.
இதற்கு எந்தவொரு மறுப்பு தெரிவிக்காத பாக்யராஜ், பூர்ணிமாவிடம் வந்து கூறியுள்ளார். பின்பு பூர்ணிமா தனது திருணத்திற்கு 3 மாத காலம் இருந்த நிலையில், அவசர அவசரமாக நடித்து கொடுத்துள்ளார்.
இந்த காரணத்தினாலேயே பூர்ணிமா நடிப்பு வேண்டாம் இருந்துள்ளார். இத்தருணத்தில் ரசிகர் ஒருவர் பூர்ணிமாவிற்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியிருக்கிறார்.
இதனை அவதானித்து சிலிர்த்து போன பூர்ணிமா தனது கணவர் பாக்யராஜிடம் வியந்து கூறியுள்ளார். தற்போது பல ஆண்டுகள் ஆன இவரது பிள்ளைகள் சினிமாவில் வலம் வருகின்றனர்.