பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய டுவிட்
பிரபல தென்னிந்திய நடிகையான பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாக விமர்சகர் உமைர் செய்த டுவிட் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டெ.
முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே, தொடர்ந்து தெலுங்கு பக்கம் தாவிய பூஜாவுக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் அமைய முன்னணி நடிகையானார்.
மறுபடியும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார், இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
2022ம் ஆண்டு வெளியான 4 படங்களும் தோல்வியை சந்தித்தன, தெலுங்கு, இந்தி மொழியிலும் தோல்வியே கிடைத்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
மகேஷ் பாபுவுடன் நடிக்கவிருந்த படத்தில் இருந்தும் பூஜா ஹெக்டே விலகிவிட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும், தற்கொலைக்கு முயன்ற பூஜாவை அவரது குடும்பத்தினர் கண்டறிந்து காப்பாற்றியதாகவும் பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து டுவிட் செய்துள்ளார்.
இந்த டுவிட் பரபரப்பை கிளப்பிய நிலையில், பூஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே அவருக்கு, கீர்த்தி சனோன் உள்பட பல நடிகைகள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |